Indians

ராணுவத்தில் சேர 19,000 காஷ்மீர் இளைஞர்கள் விண்ணப்பம்: ராணுவ அதிகாரி தகவல்

 ஸ்ரீநகர்:

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நாக் பகுதியில் கடந்த ஜூலை 8ந்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி மற்றும் அவரது இரு கூட்டாளிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து அமைதியற்ற நிலை நீடித்து வந்தது. தற்போது அந்த நிலை வெகுவாகக் குறைந்தாலும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டி விடுகின்றனர். இதனால் காஷ்மீரில் அவ்வப்போது கலவரம் உண்டாகிறது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் சேர 19,000 காஷ்மீர் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக, மூத்த ராணுவ அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ராணுவத்தின் பல்வேறு பணிகளுக்கு இன்று தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை 19,000 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இன்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தோம். மொத்தமுள்ள 3,700 விண்ணப்பதாரர்களில் 2,200 இளைஞர்கள் உடற்தகுதி தேர்வில் பங்கு பெற்றனர். இளைஞர்களின் ஆர்வம் மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றா