Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?

இனி இப்படி ஒரு முதல்வரை நாம் பார்க்க முடியுமா ?

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம், அதன் துவக்க விழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் அன்றைய முதல்வரான காமராஜரும் சென்றிருந்தார்.

தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது.

நேரு எந்திரத்தில் ஏறி நின்று ஒரு ரூபாய் காசு போட்டு எடை பார்த்தார். மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்… காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார்.

நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார். அவரோ மறுத்துவிட்டார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கு, திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று.

அப்பொழுது நேரு சொன்னார்;
“காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும்,

“இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் ஒரு ரூபாய் காசு கூட இபொழுது அவரிடம் இருக்காது” என்றார்.

பிறகு, காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு.

ஒரு ரூபாய் காசு கூட வைத்து கொள்ளாத அப்பழுக்கற்ற முதல்வரை தான் சினிமா பைத்தியம் பிடித்த தமிழக மக்களாகிய நாம் தோற்கடித்தோம்!

Exit mobile version