பத்மாவதி,pathmavathi
பத்மாவதி
Life History

பத்மாவதி வாழ்க்கை குறிப்பு- அறியப்பட வேண்டிய தகவல்கள்

பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு அழகிய பேரரசியே பத்மாவதி ஆவார். இவர்  கி பி 1300 இலங்கையில்

உள்ள ஓர் நாட்டின் இளவரசி ஆவார். இவரின் அழகால் உலகறிய பட்டவர் . இதனால் அனைத்து மன்னர்களும் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணினர்.

சிலர் ராஜ்பூட் ( தற்போதைய ராஜஸ்தான் ) ஆண்ட ரத்தன் சிங்கிடம் அவரின் அழகை பற்றி கூறுகின்றனர் . அக்கணமே அவரை மணக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ரத்தன் சிங் ஏற்கனவே திருமணம் ஆனவர் . நாகமதி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

ஆனால் பத்மாவதி உலக அழகி என்பதை அறிந்து அவரை மணக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கிறார். தன் மனைவியிடம் விடைபெற்று மிகுந்த சிரமங்களுக்கு இடையே இலங்கை சென்று சுயம்வரத்தில் கலந்து கொண்டு பத்மாவதியை மணக்கிறார். பின் அவரை தனது நாட்டிற்கு அழைத்து செல்கிறார். முதலில் இரு அரசிகளும் இணக்கமான முறையில் இருந்தாலும் போகப்போக சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியது. பத்மாவதி ஏதும் கவலை இன்றி அனைத்தும் ஏற்றுக்கொண்டார்.

ரத்தன் சிங் இரு மனைவிகளையும் சமமாக நடத்தி வருகிறார், தன்னுடைய கோட்டையில் நகை கொள்ளை நடைபெற்றற்கு காரணம் தன் அமைச்சர் என்பதை அறிந்து அவரை வெளியேற்றுகிறார் , அவமானம் தாங்காமல் வெளியே வரும் அமைச்சர் ரத்தன் சிங்கை பழிவாங்க எண்ணுகிறார் , அதற்காக டெல்லி மாமன்னன்  அல்லாவுதீன்  கில்ஜி ஐ சந்திக்கிறார் ,சந்தித்து பத்மாவதியின் அழகை பற்றி விவரிக்கிறார். அப்போதைய டெல்லி தற்போதைய பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ,சீனா  ஆகியவற்றியை உள்ளடக்கியதாக இருந்தது. அல்லாவுதீன்  கில்ஜி மிகவும் கொடுரமான அரசனாகவே இருந்தார்.

ஆட்சிக்கு வர தனது மாமனார் ஜலல்லுதின் கில்ஜி ஐ கொன்று அவரது தலையை ஈட்டியில் குத்தி ஒரு ரம்ஜான் நாளில் கோட்டைக்கு கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. அவர் மிக சிறந்த ஆட்சியாளர் , தான் நினைத்ததை நடத்தி முடிப்பவர் .அமைச்சரின் பேச்சை கேட்டு பத்மாவதியை காண பெரிய படையுடன் ராஜ்பூட் நோக்கி செல்கிறார். அங்கு சென்ற பின்பு ராஜ்பூட் கோட்டையை தாண்டி செல்ல முடியவில்லை.  நிலைமையை புரிந்து கொண்ட ரத்தன் சிங் படை எடுத்து வந்த அல்லாவுதீன்  கில்ஜி உடன்

பேச்சுவார்த்தை நடத்தினார் , அவர் பத்மாவதியை காண வேண்டும் என்று கூறுகிறார் , அதற்கு ரத்தன் சிங் முடியாது என மறுத்து விட்டார் . பின்னர் அல்லாவுதீன்  கில்ஜி தன்  தங்கையாக பத்மாவதியை பாவித்து பார்க்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார் .

பேராபத்தை தவிர்க்க தனது மனைவியை காண அனுமதி தருகிறார். பத்மாவதியிடம் இது தொடர்பாக ரத்தன் சிங் அனுமதி கேட்கிறார் . அவர் மறுத்து விடுகிறார் .

கணவரின் வேண்டுகோளை ஏற்று நேரடியாக பார்க்க முடியாது ஆனால் என்னுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்க்கட்டும் என்று கூறுகிறார்.

இதை அல்லாவுதீன்  கில்ஜியும் ஏற்று கொள்கிறார் . அவர் பத்மாவதியை பார்த்து அழகில் மயங்கி விடுகிறார் . தன்னுடன்

வந்த மற்ற வீரர்கள் கோட்டையின் உட்புற வடிவமைப்பு மற்றும் நுழைவுவாயில் ஆகியவற்றை நன்கு கவனிகின்ற்றனர் . வெளியே வந்ததும் அல்லாவுதீன்  கில்ஜி தன் படைகளுடன் கோட்டையை உடைத்து

உள்ளே செல்கிறார் , ராஜ்பூட் ஆண்கள் தோல்வியை என்றுமே எற்றுகொள்ளதவர்கள் .

போராடி அனைவரும் கொல்லபடுகிறார்கள் ரத்தன் சிங் உட்பட… ஆண்கள் அனைவரும் இறந்ததால் அல்லாவுதீன்  கில்ஜி பத்மாவதியை அடைய மிகுந்த மகிழ்வுடன்

உள்ளே செல்கிறான் , அங்கு பத்மாவதி 75000 பெண்களுடன் தானும் தீயிட்டு உயிர் விட்டார். ஏறத்தாள 7500 ஆண்கள் 7500 பெண்கள், மொத்தம்  150000 பேர் உயிர் விட்டனர்.

இதுவே பத்மாவதியின் வாழ்கை வரலாறு….

Home    குடியரசு தினம்