Portrait of V.K. Krishna Menon who was born on May 3, 1896. He was a freedom fighter and served the country in several capacities before and after Independence. He died in October 1974.
Life History தலைவர்கள்

வி. கே. கிருஷ்ண மேனன்

வி. கே. கிருஷ்ண மேனன் அவர்கள், அவரது அரசியல் வாழ்க்கையில் தூதராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தபோது ஒரு செல்வாக்கு மிக்கவராகவும், பொதுமக்களிடம் மிகவும் பிரபலமானவராகவும் திகழ்ந்தார்.

ஒரு தூதராக தனது தொழிலைத் தேர்ந்தெடுத்த அவர், ராஜதந்திரியாகவும் செயல்பாட்டார், இதுவே பல லட்சியவாதிகள் அவரை வெறுக்கக் காரணமாக அமைந்தது. அவரது தொடர்ச்சியற்ற, நயமற்ற பேச்சால், மேற்கு ஊடகங்கள், இந்திய தூதரகம் மற்றும் இந்திய அரசியல் உயரடுக்கின் சினத்திற்குள்ளானார். ஆனால், ஜவகர்லால் நேருவின் நெருங்கிய நட்பபைப் பெற்றதால், அவரால் அவரது எதிர்ப்பாளர்களின் ஏற்றஇறக்கத்தை சமாளிக்க முடிந்தது. அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, நாட்டின் ஆயுத படையை மிகவும் செம்மையாக வழி நடத்தினார். நேருவின் செல்லப் பிராணி ராட்வீலர் போல, அவர் ஒரு அணி சேரா அமைப்பின் வழக்கறிஞரும், அமெரிக்காவின் கடும் விமர்சனத்திற்குள்ளானவரும் கூட. அவர் பனிப்போரின் போது, மேலை நாடுகளின் எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால், மேலை நாடுகளுக்கு மிகவும் பிடித்தமான எதிரியாகத் திகழ்ந்தார். அவரது அதிகாரத் தன்மையும், ஆரவாரப் பேச்சும், இந்திய தேசிய ராணுவத்தில் அவரின் மகத்தான பங்களிப்பை மறக்கடிக்கச் செய்தது. 1962ல் நடந்த இந்திய-சீனப் போரின் தோல்விக்காகப் பலரும் இவரைக் குற்றஞ்சாட்டினாலும், அவரது கொள்கைகளும், வழிநடத்தலுமே இப்போதுள்ள வலிமையான இந்திய ராணுவத்திற்குக் காரணமாகும். இத்தகைய சிறப்பு மிகுந்த வி. கே. கிருஷ்ண மேனன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 3, 1896

பிறந்த இடம்: பன்னியங்கரா, கோழிக்கோடு, கேரளா

இறப்பு: அக்டோபர் 6, 1974

தொழில்: அரசியல்வாதி, ராஜதந்திரி, அரசியல் தூதர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

வேங்களில் கிருஷ்ணன், கிருஷ்ண மேனன் கேரளாவில் கோழிக்கோட்டிலுள்ள பன்னியங்கரா என்றழைக்கப்டும் அப்போதைய பிரிட்டிஷ் மலபாரில், ஒரு வேங்களில் குடும்பத்தில் மே 3, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை கோமத்து கிருஷ்ணா குருப் மற்றும் தாய் திருமதி வேங்களில் லக்ஷ்மிகுட்டி அம்மா. கடத்தநாடு ராஜாவின் மகனான அவரது தந்தை, ஒரு செல்வந்த வழக்கறிஞராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும்

அவரது ஆரம்ப கல்வியை, தலசேரி நகராட்சி பள்ளியிலும், கோழிக்கோடு பூர்வேகப் பள்ளியிலும் கற்றார். தனது இடைநிலைக் கல்வியை சாமுத்திரி கல்லூரியில் முடித்த அவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியிலிருந்து அவரது பி.ஏ. பட்டத்தைப் பெற்றார்.

ஹோம் ரூல் இயக்கத்தில் ஈடுபாடு

இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது, தீவிரமாக அன்னி பெசன்ட் மற்றும் அவரது ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர் பிரம்ம ஞானத்திலும் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்தார். அன்னி பெசன்ட் அவர்கள் நிறுவிய ‘பிரதர்ஸ் ஆஃப் சர்வீஸ்’ என்ற அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். அன்னி பெசன்ட் அவர்கள், அவரை ஊக்குவித்து, உதவியதால், அவர் 1924 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.

மேனனின் இங்கிலாந்து பயணம்

அவர் இங்கிலாந்து சென்ற பின், லண்டன் பொருளாதார பள்ளியிலும், பல்கலைக்கழக கல்லூரியிலும் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு, அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திலிருந்து தனது சட்டப் பட்டத்தையும் பெற்றார். அவர் உணர்ச்சிப்பூர்வமாகவும் உரத்தக் கூக்குரலோடும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக பரிந்து பேசத் தொடங்கினார். அவரது கல்வியை முடித்த பின்னர், மேனன் ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றினார். 1929 முதல் 1947  ஆண்டு வரை, இந்திய லீக்கின் ஒரு செயலாளராகப் பணியாற்றியபோது, அவருக்கு ஜவகர்லால் நேருவின் தொடர்பு கிடைத்தது. 1934ல் இங்கிலீஷ் பார் கவுன்சிலில் அனுமதிக்கப்பட்ட அவர், தொழிற் கட்சியில் சேர்ந்து, லண்டனின் பெருநகரமான புனித பான்க்ராசின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1934 முதல் 1947 வரை பணியாற்றினார். செயின்ட் பான்க்ராசின் பெருநகர சுதந்திரம் வழங்கப்பட்டதற்காக, மதிக்கப்பட வேண்டிய இரண்டாவது நபராக மேனன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். அவர் ஒரு கருவியாக இருந்து, தொழிற் கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி  தொழிலாளர் எம்.பி. எலன் வில்கின்சன் தலைமையில் உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அனுப்பினார். மேனன் அவர்கள் செயலாளராகப் பணியாற்றி, அவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டு “இந்தியாவில் உள்ள நிபந்தனைகள்” என்ற தலைப்பில் அறிக்கையை திருத்தினார். இந்த காலகட்டத்தில், இருபதாம் நூற்றாண்டின் நூலகத்தில் வேலை செய்யும் போது, அவர் ஆலன் லேன் என்பவருடன் இணைந்து பெங்குயின் மற்றும் பெலிகன் காகித புத்தகங்களின் ஒரு தொகுப்பாளராக இருந்து அவற்றைத் தொகுத்தார். இதுவே, பின்னர் ‘பென்குயின் புக்ஸ்’ என்ற பெயரில் வெளியடப்பட்டது.

பிந்தைய வாழ்க்கை

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அவர் ஐக்கிய ராஜ்யத்தின் உயர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1962 வரை இந்தப் பதவியில் பணியாற்றிய அவர், பின்னர் 1952 வரை ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதிகளை வழிவகுப்பவராக பணிபுரிந்தார். ஐக்கிய நாடுகள் சபையில், அவர் அமெரிக்காவைப் பற்றிய அவரது விமர்சனங்களை குறிப்பிட்டார், மேலும் அணி சேரா கொள்கையை ஏற்றுக்கொண்டார். 1957ஆம் ஆண்டு, ஜனவரி 23ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், ‘காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் காக்க’ ஒரு முன்னோடியில்லாத அளவிற்கு அவர் அளித்த ஏழு மணி நேரம் நாற்பது எட்டு நிமிடங்களுக்கான உரையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இன்றளவும் நீண்ட உரையாகக் கருதப்படுகிறது. 1953 ஆம் ஆண்டு, அவர், ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் அப்பதவியில் பணிபுரிந்த பின்னர், ஒரு இலாகா இல்லாத ஒரு மந்திரியாக மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். 1957 ஆம் ஆண்டு, பம்பாயிலிருந்து மக்களவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டில் ஜவகர்லால் நேரு உருவாகிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற சைனிக் கல்விப் பள்ளிகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது சிந்தனையில் உதித்தது. இன்றளவும், சைனிக் கல்வி சமூகம், இந்தியா முழுவதும் 24 பள்ளிகளை இயக்கி வருகிறது. 1962 ஆம் ஆண்டு, சீனாவின் கைகளில் இந்தியா அவமானகரமான தோல்வியடைந்ததை அடுத்து, மேனன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 1967ல், அவர் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட்டு, தோல்வியையும் தழுவினார்.  எனினும், 1969ல் மிட்னாபூரிலிருந்தும், 1971ல் திருவனந்தபுரத்திலிருந்தும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

வி.கே.கிருஷ்ண மேனன் அவர்கள், அக்டோபர் 6, 1974ல், தில்லியில் காலமானார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான ‘பத்ம விபூஷன் விருதை’ பெற்ற முதல் மலையாளி என்ற பெருமை இவரையே சேரும். லண்டனை தளமாக கொண்டு அவரது நினைவாக உருவாக்கிய வி.கே.கிருஷ்ண மேனன் அறக்கட்டளை இன்றளவும் கல்வியறிவின்மை ஒழித்து, இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் உயர்வை நோக்கி செயல்பட்டு வருகிறது.

காலவரிசை

1896: வேங்களில் கிருஷ்ணன், கிருஷ்ண மேனன் ஒரு வேங்களில் குடும்பத்தில் பிறந்தார்.

1924: உயர் கல்வி தொடர இங்கிலாந்து சென்றார்.

1934: இங்கிலீஷ் பார் கவுன்சிலில் அனுமதிக்கப்பட்டார்.

1947: ஐக்கிய ராஜ்யம் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

1952: ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

1953: ராஜ்ய சபாவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1956: அரசாங்கத்தில் ஒரு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

1957: நேரு அவரை இந்திய பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார்.

1962: சீனாவிற்கு எதிரான இந்தியாவின் அவமானகரமான தோல்வியை அடுத்து, பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

1974: தனது கடைசி மூச்சை அக்டோபர் 6, 1974ல், தில்லியில் சுவாசித்தார்.