Life Tips

”சிங்கிளா வாழ்வது நல்லதா?”- ஆமாம் என்கிறது இந்த ஆய்வு..!

எந்த வித உறவு முறைகளும் இன்றி, தனியாக வாழுபவர்களுக்கு பல்வேறு சாதகங்கள் உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. அவை என்ன சாதகங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்..!

தனித்து இருப்பவர்களுக்கு எந்த வித குடும்ப கடமைகளும் இருக்காது என்பதால், அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவிகள் செய்ய முடியும்.

திருமணமாகாதவர்கள், தன்னுடைய தாய் மற்றும் சகோதர சகோதரிகளுடன் அதிக பாசத்துடன் இருக்கிறார்களாம்.

பொதுவாக திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்பவர்கள், பொது சேவைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் ஆர்வமாக செயல்படுவார்களாம்.

தனித்து வாழ்பவர்கள் தங்களுடைய நேரத்தை சிறந்த முறையில் செலவளிப்பார்கள் எனவும், வாழ்வில் திருப்தியை உணர்வார்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனித்து வாழ்பவர்கள் புற காரணிகளால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் மன தைரியத்துடன் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனியாக இருப்பவர்களுக்கு நல்ல நட்பு வட்டம் இருக்கும் எனவும் அதன் மூலம் பல பயனுள்ள காரியங்களை அவர்கள் செய்ய முடியும் எனவும் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.