ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை முந்தி சாம்சங் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் சுமார் 82.4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. இது மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 24.5 % ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் இந்த காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 337 மில்லியனை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.