Cinema Entertainment Flash News Tamil

என்னை அறிந்தாலை வெளியேற்றிய ஓ காதல் கண்மணி!!

தொடர் தோல்விகளுக்கு பின்பு ”ஓ காதல் கண்மணி” மூலம் தான் இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபீசில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைத்து இடங்களிவும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் அமெரிக்காவில் என்னை அறிந்தால் வசூலை முறியடித்துள்ளதாம். படம் வெளியான 4 நாட்களில் அரை மில்லியன் டாலரை தாண்டியுள்ள இப்படத்திற்கு இந்த வாரமும் கூட்டம் அலை மோதுகிறதாம்.

மேலும், அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸில் மணிரத்னத்தின் ”ஓ காதல் கண்மணி” 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.