Home » டுமினி ஹாட்ரிக் சாதனை
Flash News Sports

டுமினி ஹாட்ரிக் சாதனை

சிட்னி: உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், தெ.ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. தெ.ஆப்பிரிக்காவின் டுமினி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி, இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார். மாத்யூஸ், குலசேகரா, கவுசல் ஆகியோர் விக்கெட்டுக்களை அடுத்தடுத்த பந்துகளில் டுமினி சாய்த்தார். இதன் மூலம் இந்த உலககோப்பை போட்டிகளில் இரண்டாவது ஹாட்ரிக் சாதனையாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முதல் ஹாட்ரிக் சாதனையை ஏற்கனவே இங்கிலாந்து பவுலர் ஸ்டீபர் பின் நிகழ்த்தி உள்ளார்.

About the author

Julier

Add Comment

Click here to post a comment