Flash News Sports

வார்னர் செய்யாவிட்டால் நான் ஈடுபடுவேன்: ஜான்சன் !!!

சிட்னி,

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது டேவிட் வார்னர் இந்திய அணியிணருடன் வார்த்தை போரில் ஈடுபடாவிட்டால் அந்த பணியை நான் செய்வேன் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

எதிரணி வீரர்களை வீண் வம்புக்கு இழுத்து அவர்களை உசுபேற்றி விடுவதில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கைதேர்ந்தவர்கள். அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி அவரிடம் மோதலில் ஈடுபட்டு அபராதத்தையும் வாங்கி கட்டிக்கொண்டார். இது போன்று எதிரணியுடன் மோதலில் ஈடுபடுவதை வார்னர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆனால் நடப்பு உலக கோப்பை தொடரில் டேவிட் வார்னர் மிகவும் ஒழுக்கமான நடத்தையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் கூறுகையில், இது போன்ற நடவடிக்கைகளில் வார்னர் ஈடுபடபோவதில்லை என்று நான் கேள்வி பட்டேன். வார்னர் செய்யாவிட்டால் நான் மோதலில் ஈடுபடுவேன். இது விளையாட்டின் ஒரு அங்கம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வாட்சனுக்கும், வகாப் ரியாசுக்கும் இடையே நடைபெற்றது மிகவும் தனிச்சிறப்பான ஒன்று. இது ஒரு மிகச்சிறந்த பொழுதுப்போக்கு என்று நான் நினைக்கிறேன். இதைவிட சிறந்த பொழுதுபோக்கை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நீங்கள் பார்க்க உள்ளீர்கள் என நான் கருதுகிறேன்” என்றார்.