‘ஹமாரி அதுஹ்ரி கஹானி’ இந்தி படத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். வித்யாவின் கணவராக ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். இவர்களின் குடும்ப தகராறு காட்சியை படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். பேசிக்கொண்டே கோபத்தில் வித்யாவின் கன்னத்தில் ராஜ்குமார் அறைவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. கன்னத்தில் கையே படாமல் அடி. வாங்கியதுபோல் கேமரா கோணத்தில் காட்சியை படமாக்கலாம் என்று கூறிவிட்டு, டேக் சொன்னார் இயக்குனர். யாரும் எதிர்பாராதவிதமாக வித்யாபாலன் கன்னத்தில் நிஜமாகவே அறைந்தார் ராஜ்குமார். இதைக்கண்டு இயக்குனர் ஷாக் ஆகிவிட்டார். காட்சி தத்ரூபமாக வந்த திருப்தி இருந்தாலும் ஹீரோவிடம், ‘ஏன் இப்படி செய்தீர்கள்?’ என்று மல்லுக்கு நின்றுவிட்டார். அருகில் இருந்த வித்யா பாலன் ‘ஒரிஜினலாக கன்னத்தில் அறைய வேண்டும் என்று இருவருமே முதலில் பேசிவைத்துத்தான் நடித்தோம். எனக்கு கோபம் எதுவும் இல்லை’ என்றார்.