Cinema Entertainment Flash News Tamil

அடுத்த படத்தில் காலடி வைக்கும் தல!!!

வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் இன்று தொடங்க உள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு  முதலில்  கொல்கத்தாவில்ஆரம்பிப்பதாக இருந்தது, ஆனால், தர்போது இன்று சென்னையில் இதன் படபிடிப்பு தொடங்க உள்ளது.

அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமத்து கதையில் நடித்து கலக்கிய படம் வீரம். இப்படத்தை டைரக்டர் சிவா இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து உள்ளது. தற்போது இதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஏ.எம்.ரத்னம்  தயாரிக்கிறார்.

சிவா-அஜித் கூட்டணி அமைக்கும் புதிய படத்துக்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.அனிருத் ரவிசந்தர் படத்தின்  தீம்  மியூசிக் மற்றும் அஜித் அறிமுகம் பாடல் நிறைவு செய்து விட்டதாக தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்த படத்தில்  கமலின் மகள் சுருதிஹாசன் அஜித் ஜோடியாகிறார். படத்தில் வில்லனாக மாடலாக இருந்து நடிகராக மாறிய பாலிவுட் நடிகர் கபீர் துகான் சிங் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 9-ந்தேதி நடந்தது. படத்தின் படபிடிப்பு  இன்று முதல் சென்னை பின்னி மில்லில் தொடங்க உள்ளது. அங்கு கொல்கத்தா மார்க்கெட் போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டு இருக்கிறது. அங்கு லட்சுமி மேனன் முன்னிலையில் அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 9ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.