Flash Indians News Sports Tamil

இந்திய அணிக்கு நான் பயிற்சியாளரா??? கங்குலி மறுப்பு !!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் பதவி காலம் கடந்த உலககோப்பை போட்டியுடன் முடிந்தது.

இந்திய அணி ஜூன் மாதம் வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதற்குள் பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவை முன்னாள் கேப்டன் கங்குலி சந்தித்து பேசினார். அப்போது இந்திய அணி பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாக கங்குலி தெரிவித்தார் என்று கூறப்பட்டது. இதனால் கங்குலி பயிற்சியாளர் ஆகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதை கங்குலி மறுத்து உள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், இந்த விஷயம் பற்றி இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன். யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இதை யெல்லாம் யார் சொன்னது? இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் யாரிடமும் பேச வில்லை. நானும் பயிற்சியாளர் பதவி கேட்க யாரையும் அணுக வில்லை.

டால்மியாவை நான் தினமும் சந்திக்கிறேன். பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக சந்திப்பேன். ஏனென்றால் அவர் தலைவராகவும், நான் இணை செயலாளராகவும் இருக்கிறோம் என்றார்.

வருகிற 26–ந்தேதி பி.சி.சி.ஐ செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படலாம். கங்குலி, ராகுல் டிராவிட், ரவிசாஸ்திரி பெயர்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.