தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய தியேட்டரின் கட்டுமான பணிக்கு விஜய் 15 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர்கள் சங்கம் சார்பாக புதிய தியேட்டர் ஒன்று வளசரவாக்கத்தில் கட்டப்பட்டது. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த திரையரங்கத்தின் கட்டுமானத்திற்காக விஜய் 15 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனால் இயக்குநர் சங்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மேலும் உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர்த்து புதிதாக ஒரு ஆடிட்டோரியம் கட்டவும் விஜய் பணம் கொடுத்துள்ளார். இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் , சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்துள்ள இந்த ஆடிட்டோரியத்திற்கு மறைந்த மாபெரும் இயக்குநர் கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆடிட்டோரியத்தில் உதவி இயக்குநர்கள் எடுக்கும் குறும்படங்கள், மற்றும் கலைஞர்களின் டாக்குமெண்டரிகள் என வாராவாரம் திரையிடப்பட்டு தரமான படங்களை பெரிய திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ளனர். இதனால் பல நல்ல கதைகள், குறும்படங்களுடன் தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கும் பலருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.