Flash freedom fighter News Tamil

கழிவு நீரில் தயாராகும் பீர் !!!!!

கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம், உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. இத்தகைய மறுசுழற்சி பொருட்களை மக்கள் ஆதரித்த வண்ணமே உள்ளனர். அந்த வகையில் அடுத்த வருடத்தில் இருந்து உலக நாடுகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து பியர் தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலகில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியான நவீன நடவடிக்கைகளில் இறங்க உள்ளனர்.

இதன் முதற்கட்டமாக கலிபோர்னியா நகரில் இந்த மறுசுழற்சி முறையினை செயல்படுத்த உள்ளனர். நகர மக்கள் பயன்படுத்திய தண்ணீரை பல அடுக்காக சுத்தப்படுத்தி, அதனை பிரபலமான பியர் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனர்.

இது பியர் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும், உலக மக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் தயாராகும் பியர்களில், அதன் சுவை குறைபடாமல் இருக்க பல கட்ட ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். மறுசுழற்சி என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாக்கடை தண்ணீரில் ‘பியர்’ என்பது, கொஞ்சம் ‘உவ்வே’வாகவே தெரிகிறது.