Flash News Sports

தவான்- அபார கேட்ச்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்து வங்காள தேசம் தடுமாற்றம்

உலக கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி லீக் ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக விளங்குகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி (இந்தியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), ஜோஷ்டேவி (ஸ்காட்லாந்து) ஆகியோர் உள்ளனர்.

தற்போது 6-வது போட்டியில் விளையாடும் ஷமி 17 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

மக்மதுல்லாவும், 21 ரன்களுடன் நல்ல ஆடிகொண்டிருந்தபோது. முகமது ஷமியை மீண்டும் பந்து வீச அழைத்தார் டோனி. அந்த ஓவரில், ஷமி வீசிய பந்தை மஹ்மத்துல்லா தூக்கி அடித்து ஆட, அது கிட்டத்தட்ட எல்லைக் கோட்டை கடக்கும் நிலைக்கு பறந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், எல்லைக் கோட்டின் மிக அருகில் நின்ற தவான், அதை கேட்சாக மாற்ற முயன்றார். அப்போது, நிலைதடுமாறி, எல்லைக் கோட்டுக்கு அந்த பக்கம் தவான் சாய தொடங்கினார். பந்தோடு விழுந்தால், அது சிக்சராக மாறிவிடும் என்பதை உணர்ந்தார் தவான். உடனே அவரது மூளையில், பல்பு எரிந்தது. எனவே, பந்தை மேலே தூக்கி எறிந்து விட்டு பவுண்டரி எல்லைக்குள் சென்று காலை ஊன்றினார் தவான். பிறகு, மீண்டும் மைதானத்திற்குள் நடந்து வந்து, மேலேயிருந்து வந்த பந்தை கேட்சாக மாற்றினார்.

தமிம் இக்பாலை அழகாக கேட்ச் செய்து அனுப்பிய அவர், ஷமி பந்து வீச்சில், சவும்யா சர்க்காரை மிகப் பிரமாதமாக அவுட் செய்து வெளியேற்றினார். ஷமி வீசிய அவுட்சைட் எட்ஜ் பந்தை சர்க்கார் அடிக்க, அதை வெகு அழகாக நேர்த்தியாகப் பிடித்து சர்க்காரைக் கலைத்து விட்டார் டோனி. உமேஎஷ் யாதவ் பாலில் விக்கேட் கீப்பர் ரஹிமை டோனி கேட்ச் செய்து அவுட் ஆக்கினார்.

139 ரன்களுக்கு 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து வங்காளதேசம் தடுமாறி வருகிறது.