மதுரை : தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வல்லநாடு என்ற இடத்தில தான் பாலம் சேதம் அடைந்துள்ளது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டிருப்பதே சேதத்திற்கு காரணம் என் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் தாமிரபரணி ஆற்று குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தான் இன்று அதிகாலை பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் தற்போது 4அடிக்கு மேலாக விரிவடைந்துள்ளது. இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக பாலத்தில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள், சிறு வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த பாலம் எந்த நேரத்திலும் அதிகமான சேதங்களை சந்திக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த பாலம் தான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை இணைக்கின்ற முக்கியமான பாலமாக கருதப்படுகிறது. இந்த பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் இன்று அதிகாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை எந்த அதிகாரிகளும் இதுவரை பார்வையிட வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.