Flash Indians News

துப்பாக்கிச் சூட்டில் 8 வயது சிறுமி பலி: முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்

பீகார் மாநிலத்தில் நிலத் தகராறினால் விளைந்த மோதலில் 8 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பலிக்கு ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் எம்.எல்.ஏ. இன்று கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா: 

முன்னாள் எம்.எல்.ஏ.யான இவர் ரோக்தஸ் மாவட்டத்தில் உள்ள டென்டுனி கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை அவர் வீடு முன்பு இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சூர்யதேவ் சிங்கின் உறவினர் வந்து சொத்துப் பிரிவினைப் பற்றி பேசி தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சிலரும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ சூர்யதேவ் சிங் வீட்டுக்குள் சென்று துப்பாக்கியை எடுத்து வந்து மிரட்டினார்.

திடீரென அவர் அந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். கண் மூடித்தனமாக அவர் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டுகள், அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர், சிறுமிகள் மீது பாய்ந்தது.

4 சிறுவர்-சிறுமிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களது அலறல் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஹஜிரியா என்ற 13 வயது சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாள்.

திவாகர், ‌ஷகீல், பிரகாஷ் ஆகிய மூவரும் பலத்த குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இரண்டு சிறுவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதை அறிந்ததும் முன்னாள் எம்.எல்.ஏ. சூர்யதேவ் சிங் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே ரோக்தஸ் மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.யை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்றிரவு அவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரது வீட்டில் இருந்து மூன்று துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சூர்ய தேவ் சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் குமார் சிங் இன்று தெரிவித்துள்ளார்.