Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தேசிய சாதனை படைத்த 3 வயது சிறுமி!

விஜயவாடா,

கடந்த 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு பிறகு நிகழ்ந்த சாலை விபத்தில் சர்வதேச வில்வித்தை வீரர் செருகொரி லெனின் மரணமடைந்தார். அவரது இளைய சகோதரி ஷிவானி. அண்ணனை போலவே வில்வித்தையில் கலக்குகிறார் 3-வயதே ஆன ஷிவானி. தனது தந்தையார் சத்யநாராயணா நடத்தி வரும் வோல்கா ஆர்செரி இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்று வரும் ஷிவானி வில்வித்தை போட்டியில் புதிய சாதனை படைத்து தேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 5 மீட்டர் முதல் 7 மீட்டர்கள் வரையிலான தூரத்தில் 36 ஏரோ ஷாட்டுகளில் 388 புள்ளிகளை ஸ்கோர் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்த லிட்டில் ஷிவானி. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதி விஷ்வாஜிர் ரே மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய பிரதிநிதி ராம கிருஷ்ணா இந்த சாதனையை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டனர். மேலும் ஷிவானிக்கு சாதனை சான்றிதழும் வழங்கப்பட்டது. பிரபல வில்வித்தை வீரர்கள் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version