Flash News World

பூமியில் ஆரம்பமா உள்ள அலியான் சாம்ராஜ்யம் !!!

நாசாவின் வேற்றுக்கிரகவாசிகளை கண்டறியும் பிரிவான SETI முதல் முதலாக பரவலாக அண்டத்தில் வேற்றுக்கிரகவாசிகளை தேடும் பணியை தொடங்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டதாக அறிவித்துள்ளது.

இது பற்றி SETI யின் பொறுப்பாளர் Douglas Vakoch கூறும் போது…
கடந்த காலகட்டத்தில் 3800 இற்கு மேற்பட்ட கிரகங்களை உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் என நாசா ஆய்வு வகைப்படுத்தியுள்ளது. அக் கிரகங்களை குறிவைத்தே இந்த ஏலியன்ஸ் தேடல் இடம்பெறவுள்ளது.

அதாவது, உயிரினங்கள் உணரும் வகையில் சமிக்ஞைகள் அக்கிரகங்களை நோக்கி விடப்படவுள்ளது.

எனினும் ஒரு தரப்பு இத்திட்டத்தை எதிர்க்கிறது. அவர்கள் தரப்பில், வேற்றுக்கிரகவாசிகள் எம்மைவிட அதீத தொழில்நுட்பத்தை கொண்டிருப்பின் எமது தொடர்பு பூமியின் அழிவிற்கு வித்திடும் என கூறுகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கையில், கடந்த 4பில்லியன் ஆண்டுகளாக பூமியில் உயிரினம் வாழ்கிறது. இதுவரை எந்த வேற்று உயிரினமும் எம்மை தாக்க முனையவில்லை. எனவே இப்பயம் தேவையற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஓரிரு ஆண்டுகளில் சமிக்ஞைகள் அனுப்பபடலாம்.

ஏற்கனவே, வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த சமிஞை பற்றி நாம் பார்த்திருந்தோம்.