Flash News Sports

ருபேல் ஹொசைனிடம் விராட் கோலி அமைதியாக போனது ஏன் தெரியுமா?

இந்திய அணியின் துணைக்கேப்டன் விராட் கோலிக்கும், பாலியல் சர்ச்சையில் சிக்கி ஜாமினில் வெளிவந்துள்ள ருபேல் ஹொசைனுக்கும் கடந்த சில வருடங்களாகவே முட்டல் மோதல் உண்டு.

இந்த உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், விராட் கோலி 3 ரன்னில் ருபேல் ஹொசைன் பந்தில் அவுட் ஆனார். அப்போது கோலியை பார்த்து வெறுப்பேற்றும் வகையில் வங்கதேச பந்துவீச்சாளர் ருபேல் ஹொசைன் நடந்து கொண்டார். ஆனால் ஹொசைனின் நடவடிக்கையை இந்திய துணைக்கேப்டன் கண்டுகொள்ளவில்லை. சூரியனை பார்த்து நாய் குலைத்த கதையாக நகர்ந்து போய் விட்டார்ருபேல் ஹொசைன் இவ்வாறு நடக்க காரணம் உண்டு. இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போது விராட் கோலிதான் இந்தியாவின் கேப்டன். அந்த தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது, ருபேல் மற்றும் விராட் கோலிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சக வீரர்கள் தலையிட்டு சண்டையை விலக்கிவிட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையின்போது விராட் கோலி, வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து பதிலடி கொடுத்தார்.இந்நிலையில்தான் இன்றும், களத்திற்கு வந்த விராட்டை சீண்டி பார்த்துள்ளார் ருபேல். கோலியும், கொஞ்ச ரன்களில் அவுட் ஆகவே, ருபேலும் ஆக்ரோஷத்தால் கத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் ஒருவரை விராட் கோலி திட்டியதால் சர்ச்சைக்குள்ளானார்.

இதையடுத்து இந்திய அணி நிர்வாகம் விராட் கோலியை கண்டித்தது. அதன் காரணமாகத்தான் விராட் கோலி அமைதியாக சென்றதாக சொல்லப்படுகிறது. இல்லையென்றால் ருபேல் ஹொசைனின் நடத்தைக்கு மட்டையால் அடி கிடைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது..

About the author

Julier