Entertainment Flash News

வரலாறு படைத்தது ‘வேதாளம்’ : 2 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்! to the

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாஸ் ஓபனிங்கிற்கு பெயர்போன முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். தனது ரசிகர் மன்றங்களை அதிகாரபூர்வமாக கலைத்தபிறகும்கூட அவர் படங்களுக்கான ஓபனிங் இதுவரை குறைந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனோல் தல படங்களுக்கான ஓபனிங் ஏறிக்கொண்டே போகிறது என்பதுதான் உண்மை. அந்தவகையில், ‘வேதாளம்’ படத்திற்கு இதுவரை எந்த தமிழ்ப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.

முதல் நாள் தமிழக கலெக்ஷனில் இதுவரை நம்பர் 1ஆக இருந்த ‘லிங்கா’ படத்தின் வசூலை (13 கோடி) முறியடித்து, முதல் நாளில் மட்டுமே 15 கோடியை வசூலித்துள்ளதாம் வேதாளம். தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் அதிகாலை 1.30 மணியிலிருந்தே தமிழகமெங்கும் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்திற்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த சிறப்புக்காட்சிகளின் டிக்கெட் விலை 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை தியேட்டரிலேயே விற்கப்பட்டன. இதுதவிர பிளாக்கில் ‘வேதாளம்’ படத்தின் டிக்கெட்டுகளை 1000 முதல் 5000 ரூபாய் வரை விற்றதாக கூறப்படுகிறது.

2 நாட்களில் ‘வேதாளம்’ படத்திற்கு கிடைத்துள்ள வசூல் விவரம் இங்கே….

முதல்நாள் வசூல் (தோராயமாக) :

தமிழ்நாடு – 15.5 கோடி
கேரளா – 2.10 கோடி
கர்நாடகா – 2 கோடி
மற்ற மாநிலங்கள் – 1.10 கோடி
மொத்தம் (இந்திய அளவில்) – 20.20 கோடி

2ம் நாள் வசூல் (தோராயமாக) :

தமிழ்நாடு – 9 கோடி
கேரளா – 1.70 கோடி
கர்நாடகா – 1.45 கோடி
மற்ற மாநிலங்கள் – 90 லட்சம்
மொத்தம் (இந்திய அளவில்) – 13.05 கோடி

இந்திய அளவில் 2 நாட்களில் ‘வேதாளம்’ படம் 33 கோடிகளை வசூலித்துள்ளதாக நம்பத்தகுந்த விநியோகஸ்தரிடமிருந்து பிரத்யேக தகவல் கிடைத்திருக்கிறது