Cinema Entertainment Flash News

வித்தியாசமாக டிரெண்டிங்கில் இந்திய அளவில் கலக்கிய விஜய் ரசிகர்கள்

விஜய் மீது அவருடைய ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர் என்பது நமக்கு தெரியும்.
ஒரு வாரத்துக்கு முன்பாக நேபாளத்தில் நிலநடுக்கத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்து விஜய்யின் கௌரவத்தை இந்திய அளவுக்கு உயர்த்தினர்.
இது போன்று நிறைய உதவிகளை விஜய்யும் அவருடைய ரசிகர்களும் செய்து வருகின்றனர். அதுபோல நிறைய ட்ரண்டிங் செய்தும் விஜய்யின் புகழை உயர்த்துகின்றனர்.
இன்று விஜய் ரசிகர்கள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடித்துள்ளனர். அதாவது ஒரு வித்தியாசமான ஹாஷ்டாக்(#VIJAYவிஜய்വിജയ്విజయ్विजय)உடன் விஜய்யின் பெயரை ட்ரண்டிங் செய்து சாதனை படைத்துள்ளனர்.
அதாவது விஜய்யின் பெயரை பலமொழிகளில் எழுதி அதை ட்விட்டரில் இந்திய அளவுக்கு ட்ரண்டிங் செய்து வருகின்றனர். இதனை மற்ற மொழி நடிகர்களும், அவர்களுடைய ரசிகர்களும் வியந்து பார்த்து வருகின்றனர். இது போன்ற வித்தியாசமான ஹாஷ்டாக் எந்த நடிகருக்கும் பயன்படுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.