News Sports Tamil

இறுதி எச்சரிக்கையுடன் சுனில் நரைன் பந்து வீசுவதற்கு அனுமதி அளித்தது பிசிசிஐ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவருமான சுனில் நரைன், அண்மையில் ஐதாராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது விதிமுறைக்குமாறாக பந்து வீசியதாக  கள நடுவர்கள் சுனில் நரைன் மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர் ஆப் ஸ்பின் பந்துகளை வீச பிசிசிஐ தடை விதித்தது. இதனால் கடந்த 28-ந்தேதிக்குப் பிறகு அவர் கொல்கத்தா அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பிராட் ஹாக் ஆடும் லெவனில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் இவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்பிறகு சுனில் நரைன் பந்து வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சுனில் நரைனின் பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. அவர் ஆப் ஸ்பின், நக்குல் பந்து மற்றும் குயிக் ஸ்ரெய்ட் பந்து ஆகிவற்றை இந்த ஐ.பி.எல். போட்டியில் வீசலாம். மீண்டும் இவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுப்பப்பட்டால் இந்த தொடர் முழுவதும் அவர்  பந்து வீச தடை விதிக்கப்படுவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.