Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழக அரசு விரைவில் பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது.

சென்னை:

கல்வி கட்டாய உரிமை சட்டத்தில் 2015-16-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 25 சதவீத மாணவர்களுக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த நிதியை தமிழக அரசு விரைவில் பள்ளிகளுக்கு வழங்க இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி குழந்தைகள் இலவச மற்றும் கட்டயாக கல்வி உரிமை சட்டத்தில் ஒவ்வொரு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் அந்த பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25 சதவீதம் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கான கல்வி கட்டணம் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? என்று கேட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதன்படி 2015-16-ம் ஆண்டுக்கு தமிழக பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி கட்டணம் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அந்த நிதியை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையும், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு தொடக்க பள்ளிகள் இயக்குனரகமும், மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் வழங்க உள்ளது. மாவட்டம் வாரியாக பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு நிதியை வழங்கும்.

Exit mobile version