Home » News » Flash » ஐபிஎல் 8: டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி
Flash

ஐபிஎல் 8: டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8வது சீசன் 2வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. பின்னர் 151 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதனால் 1 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.