நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் நெருங்கிய உறவினர்களை மத்திய அரசு 20 ஆண்டுகளாக உளவு பார்த்ததாக பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், சுபாஷ் சந்திரபோஷின் உறவினர் அர்தேந்து போஷ், தேசியவாத தலைவரான சுபாஷ் சந்திரபோஷின் பாரம்பரிய பெருமையை அழிக்க நேரு-காந்தி குடும்பத்தினர் முயற்சித்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் வசித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் சகோதரர் மகன் அர்தேந்து போஷ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது
கூறியதாவது: – “ 1947 ல் இருந்து, அவர்கள்( நேரு- காந்தி குடும்பத்தினர்) நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பெயரையும் நினைவுகளையும் அழிப்பதற்காக தங்களால் முடிந்த அளவு செயல்களை செய்தனர். சுபாஷ் சந்திரபோஷ், சர்தார் வல்லபாய் படேலை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள ஒரு வரலாற்று புத்தகம் ஒன்று கூட அவர்கள் இருவரது பெயரை குறிப்பிடாமல் இல்லை” என்றார்.
நேதாஜியின் இளைய சகோதரரும் அர்தேந்ந்து போஷின் தந்தையுமான சைலேஷ் சந்திரா கடந்த 1984 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அர்தேந்து போஷிடம், உங்கள் தந்தைக்கு அவர் உளவு பார்க்கப்பட்டது தெரியுமா என்று கேள்வி எழுப்பட்ட போது, அவர் பல முறை உளவு பார்க்கப்பட்டது பற்றி தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
Add Comment