உத்தரப்பிரதேசத்தில், ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளும் 25 புதிய மருத்துவக் கல்லூரிகளும் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைகளுக்கான இடம் தேர்ந்தெடுக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க, விவசாயக் கடன் தள்ளுபடி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மக்களிடம் வாக்குறுதிகளை வீசி வாக்குக் கேட்டது. இதையடுத்து, 303 தொகுதிகளில் பெரும்பான்மை பலத்துடன் வென்ற பா.ஜ.க , யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சியமைத்தது. பதவியேற்றவுடன் இறைச்சிக் கூடங்களுக்குத் தடை, ஆன்டி-ரோமியோ படை என மக்கள் விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்தி வந்த ஆதித்யநாத் அரசு, தற்போது தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மலிவு விலையில் அன்னபூர்ணா உணவகத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. தற்போது அரசு, தங்களது தேர்தல் வாக்குறுதியான எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளைத் துவக்கியுள்ளது. இதையடுத்து, மருத்துவமனைகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளன.
Add Comment