political

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு அதிரடி!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு அரசு வேலை கிடையாது என்னும் அதிரடி சட்டத்தைக் கொண்டுவரப்போகிறது, அசாம் அரசு.அசாம் அரசு, நேற்று மக்கள்தொகைக் கொள்கை வரைவை (population policy ) வெளியிட்டது.  மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. அசாமின் புதிய மக்கள்தொகைக் கொள்கை வரைவை அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய வரைவுகள் : இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டாது, சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, அரசு வேலையில் இருப்பதற்கான தகுதி கிடையாது. வேலை வாய்ப்புக்காக அரசு வழங்கும் நலத் திட்டங்கள், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்குக் கிடையாது, உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோருக்கும் இந்த விதி பொருந்தும்.

அசாமில் அனைத்து பெண்களுக்கும் பல்கலைக்கழகப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பெண்களுக்கு அரசு வேலையில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்தப் புதிய கொள்கை வரைவு குறித்து ஜூலை மாதம் வரை அசாம் மக்களிடம் கருத்து கேட்கப்படும்.  பின்னர், சட்டசபைக் கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்குப் பிறகு, விதிமுறைகள் வகுக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது.

About the author

Julier