political

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா எப்போதும் காலூன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்

டாக்டர் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், ப.ரங்கநாதன், கு.க.செல்வம், ரவிச்சந்திரன், மோகன், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, சைதை குணசேகரன் பாலவாக்கம் விசுவநாதன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் திரளாக சென்றிருந்தனர்.

அங்கு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

இன்றைக்கு தமிழகத்தில் ஆளுங்கட்சி செயல்படாததால் வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனின் உண்ணாவிரதம் ஆளுங்கட்சியின் அவலகங்களை எடுத்துக் காட்டுகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற நினைக்கிறது. அது எப்போதும் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் பகுதிச் செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழு மலை, வெல்டிங் மணி, பொன்னுரங்கம், சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, வட்ட செயலாளர்கள் முரளி, வெல்டிங்ராஜா, மு.சத்யா உள்பட ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.