political

மோசமான வானிலை: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

 ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது. விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காஷ்மீரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் ஆணைய அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விமான நிலையங்கள் ஆணையத்தின் ஸ்ரீநகர் இயக்குனர் ஷரத் குமார் கூறுகையில் “மோசமான வானிலை காரணமாக விமானங்கள் வருவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் காஷ்மீருக்கு வரும் 5 விமானங்களும், இங்கிருந்து செல்லக்கூடிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.