Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வருமான வரித்துறை சோதனைக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இல.கணேசன்

அவனியாபுரம்:

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற ஏப்ரல் 14-ந்தேதி பா.ஜனதா கட்சி தொடங்கிய நாள். இதையொட்டி மாவட்ட வாரியாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க நான் செல்கிறேன்.

தருண்விஜய் எம்.பி. தென்னிந்தியர்கள் குறித்து கூறிய சர்ச்சை கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை.

ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் சவப்பெட்டி பிரசாரமும், தினகரன் பணத்தை வைத்து பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் எங்கும் சோதனை நடத்த அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே இதில் அரசியல் தலையீடு இல்லை.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version