political

வியாழன் கிரகத்தை மிக அருகில் போட்டோ எடுத்த ‘டெலஸ்கோப்’

நியூயார்க்:

விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா மையம் அதி நவீன சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அதில், சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் வியாழன் கிரகத்தை மிக அருகில் போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 3-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வந்த வியாழன் கிரகத்தை அது துல்லியமாக போட்டோ எடுத்துள்ளது. பொதுவாக மிக பெரிய கிரகமான வியாழன் பூமியில் இருந்து 60 கோடியே 80 லட்சம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

தற்போது அது பூமியில் இருந்து சூரியனுக்கு எதிரே வந்து நிற்கிறது. அதாவது பூமி, சூரியன், வியாழன் ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் உள்ளன.

எனவே வியாழன் கிரகம் பூமிக்கு அருகே உள்ளதால் ஹப்பிள் டெலஸ்கோப் அதை தெளிவாக படம் பிடிக்க முடிந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அருகில் இருப்பதால் வியாழன் கிரகம் மிகப்பெரிய சிவப்பு புள்ளி போன்று வெளிச்சமாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகலை விட இரவில் இதை தெளிவாக பார்க்க முடியும்.