political

கவர்னர் கிரண்பேடி கீழ்பாக்கம் செல்ல வேண்டியவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

புதுச்சேரி:

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுவை வந்திருந்தார்.

அவர் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட் டுக்கு சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த இளங்கோ வனிடம் புதுவையில் அரசு- கவர்னர் இடையே நடைபெறும் மோதல் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்து இளங்கோவன் கூறிய தாவது:-

கிரண்பேடி மனநிலை பாதித்தவர் போல் செயல் படுகிறார். கீழ்பாக்கத்துக்கு அனுப்ப வேண்டியவரை பிரதமர் மோடி புதுவைக்கு அனுப்பி வைத்து விட்டார்.

எத்தனை கிரண்பேடிகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நாராயணசாமியை ஒன்றும் செய்ய முடியாது. புதுவை மக்களின் பலத்தோடு நாராயணசாமி இவற்றை சமாளிப்பார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும். தேர்தல் கமி‌ஷனுடைய செயல்பாடு திருப்தியாக இல்லை.

டி.டி.வி. தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு ஏராளமான பணத்தை அள்ளி கொடுக் கிறார்கள். எனவே அவரை வேட்பாளரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக தேர்தலை நிறுத்த கூடாது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.