Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஆங்கிலம் கற்க சசிகலா விருப்பம்: ஆசிரியர் கேட்டு அதிகாரிகளிடம் மனு

 பெங்களூர்:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல மொழிகளில் பேசக்கூடிய திறமை உடையவர். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். அவரது நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இல்லை.

இதனால் பெங்களூர் ஜெயிலில் இருக்கும் சசிகலா ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார்.

ஆங்கிலம் கற்பதற்காக ஜெயிலில் ஒரு ஆசிரியரை அனுப்பி வைக்குமாறு சசிகலா பெங்களூர் மத்திய சிறை அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தனது ஆங்கில மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ள அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சசிகலா கோரிக்கையை ஏற்று ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக சிறை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Exit mobile version