Home » political » ஆர்.கே. நகர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
political

ஆர்.கே. நகர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ராயபுரம்:

ராயபுரம் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 11.45 மணியளவில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தண்டையார் பேட்டை தி.மு.க. தலைமை தேர்தல் பணிமனைக்கு சென்றார். அங்கு தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில் எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், பொன்முடி, பெரிய கருப்பன், பி.கே.சேகர்பாபு, சுதர்சனம், அனிதாராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன் மற்றும் செல்வகணபதி, சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலில் பணியாற்றிய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

விரைவில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் அல்லது பொதுத்தேர்தல் வந்தாலும் அனைவரும் கடுமையாக பணியாற்றி தி.மு.க. ஆட்சி மலர அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் தண்டையார் பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் கட்சி பிரமுகரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

About the author

Julier

Add Comment

Click here to post a comment