political

கெயிக்வாட்-க்கு எதிரான தடையை வாபஸ் பெற்ற விமான நிறுவனங்கள்

விமான ஊழியரைத் தாக்கிய சம்பவத்தில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட்-க்கு ஏர் இந்தியா உள்ளிட்ட பல தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன. தற்போது அந்தத் தடையை எல்லா நிறுவனங்களும் விலக்கியுள்ளனர்.

சிவசேனா எம்.பி. கெயிக்வாட் தனியார் விமான ஊழியரைத் தாக்கியதால் சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் முதல், அத்தனை தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் கெயிக்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடைவிதித்தன. அவர் மன்னிப்பு கேட்காமல் தடையை விலக்க முடியாது என விமான நிறுவனங்கள் அறிவித்தபோது மன்னிப்பு கேட்க மறுத்தார் எம்.பி. சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக உள்ளூர் விமானப் போக்குவரத்து அமைச்சர் கஜபதியிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஏர் இந்தியா விமான நிறுவனம் கெயிக்வாட் விமானப் பயணம் மேற்கொள்வதற்கான தடையை நிக்கியது. இன்று ஏர் இந்தியாவைத் தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்களும் கெயிக்வாட் மீதுள்ள தடையை விலக்கியுள்ளன. ’விஸ்தாரா’ என்ற ஒரேயொரு தனியார் விமானம் மட்டும் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை.

இன்று காலையில் மும்பைக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கெயிக்வாட் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.