Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

81 வெளிநாட்டு படகுகளுக்கு தீவைத்த இந்தோனேசியா

 ஜகர்தா:

இந்தோனேசியா நாட்டின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்த நாட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இந்தோனேசியா கடற்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தது. பின்னர் 81 படகுகளையும் இழுத்துச் சென்றனர். அவற்றுக்கு தீவைத்து அனைத்து படகுகளையும் அழித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுபோல வெளிநாட்டு படகுகள் வந்தால் அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளை இந்தோனேசியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி இதுவரை 317 மீன்பிடி படகுகள் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version