Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

அமெரிக்காவின் செனட் சபை தேர்தலில் போட்டியிடும் இ-மெயில் தமிழன் சிவா அய்யாத்துரை

 வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் சிவா அய்யாத்துரை சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற அய்யாத்துரை அங்கு தற்போது முன்னனி தொழில் முனைவராக உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை உறுப்பினர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் சிவா அய்யாத்துரை போட்டியிட முடிவு செய்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எலிசபெத் வாரென்னை எதிர்த்து அவர் களமிறங்க இருக்கிறார்.

வாழ்க்கையின் எல்லா நேரங்களிலும் உண்மைக்காக போராட இருப்பதாகவும், அமெரிக்கா வாய்ப்புகளுக்கான தேசம் எனவும் சிவா அய்யாத்துரை தெரிவித்துள்ளார்.

Exit mobile version