Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் கடுப்பு – குற்றச்சாட்டு

 வாஷிங்டன்:

சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். பல்வேறு நாடுகள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவும் தனது ஒப்புதலை கடந்தாண்டு அளித்தது.

இந்த நிலையில், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த ஒப்பந்தத்தத்தால் சீனா, இந்தியா இரு நாடுகளுக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. சீனா, இந்தியா இரு நாடுகளும் 2030-ம் ஆண்டு வரையில் கார்பன் – டை- ஆக்சைடைக் குறைப்பதற்கான எந்தவொரு முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. இவ்விரு நாடுகளும் கார்பன் -டை -ஆக்சைடைக் குறைக்க கடமைப்பட்டுள்ளன.

காற்றின் தரம், கார்பன் -டை-ஆக்சைடு ஆகியவற்றை பராமரிப்பதில் நாங்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம். அதே நேரத்தில் வேலைவாய்ப்பினையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தை மிகவும் சுருங்க செய்கிறது” என்றார்.

Exit mobile version