Science

உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு

லண்டன்:

விண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு வெளியேயும், அருகேயும் பல புது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பூமியை போன்று உயிரினங்கள் வாழும் தகுதி படைத்தது. அது பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது.

உயிரினங்கள் வாழத்தகுதியுள்ள இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்மூலம் சூரிய குடும்பம் அருகேயுள்ள வாழத் தகுதியுள்ள 6-வது கிகரமாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகவும் இது கருதப்படுகிறது.