Science

பேஸ்புக் குறித்து வெளியான ஆய்வு முடிவுகள்

உலகளவில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நியூயோர்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் பேஸ்புக் சம்மந்தாக ஆய்வை நடத்தியது.

5208 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பேஸ்புக் பயன்பாடு சமூகம், உடல் மற்றும் உளவியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக்கை அதிக நேரம் யார் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கான விடையும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, தங்கள் சுய விவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்கள் தான் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.