Science

தெரிந்து கொள்வோம்: மின்னல் உருவாவது எப்படி?

சிறு வயதில் நாம் ஆச்சரியப்பட்ட விடயங்களில் ஒன்று இடி, மின்னல்… இதெல்லாம் எப்படி உருவாகுகிறது என்று நிச்சயம் யோசித்து இருப்போம்.

மின்னல்

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று பூமியில் இருந்து மேலே எழும்பும்.

இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.

இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும் போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும்.

இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது.

இவ்வாறு உருவாகும் வெளிச்சத்தை மின்னலென்றும், சத்தத்தை இடியென்றும் சொல்கிறோம்.

இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது.

இடிச்சத்தம் அதற்குப் பிறகுதான் நம் காதுகளை அடைகிறது.