Science

இயற்கையாக உருகும் பனிக்கட்டிகள்: நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக இன்று உலக அளவில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.

இவ் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதுடன், பனிக்கட்டிகளும் உருக ஆரம்பித்துவிட்டன.

இதனால் கடல் மட்டம் அதிகரித்து கரையோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை எட்டிவிட்டன.

இந்நிலையில் இயற்கையான முறையில் பனிக்கட்டிகள் அழிந்து வருகின்றமை நாசா விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிரீன்லாந்து பகுதியில் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்திருப்பது உணரப்பட்ட நிலையில் ஆய்வு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அங்குள்ள பனிப் பிரதேசங்களில் அலை போன்ற வடிவங்கள் காணப்பட்டுள்ளமையை நாசா நிறுவனம் அவதானித்துள்ளது. இவ்வடிவங்களில் இருந்து பனிப்படலங்கள் வழித்துச் செல்லப்பட்டிருந்தன.

இதேவேளை 2000 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆண்டுதோறும் 11 பில்லியன் தொன் எடைகொண்ட பனிக்கட்டிகள் கடலில் கலப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.