Science

கன மழை காரணமாக பூமியின் மேற்பரப்பை போன்று மாறியுள்ள செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு: விஞ்ஞானிகள் தகவல்

கன மழை காரணமாக பூமியின் மேற்பரப்பை போன்று மாறியுள்ள செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு: விஞ்ஞானிகள் தகவல்

கன மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு கடின தன்மையுடன் மாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன. அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது. இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5% பூமியை வந்தடைந்தன கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984-ல் அண்டார்டிக்காவில் ஆல்லன் ஹில்ஸ் 84001 என்ற 1.95 கி.கி எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர். 1996-ல் நாசா விஞ்ஞானி டேவிட் மெக்கி  என்பவர் இதில் “நானோ பாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார். இதை தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்.

இந்நிலையில், சமீபத்தில் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை மாற்றியமைத்திருக்கலாம் என ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளனர். அவர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆறுகளை போல் உள்ள சேனல்களை கண்டறிந்து உள்ளனர். பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு  கடின தன்மையுடன் மாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் க்ராட்காக் மற்றும் ரால்ப் லாரன்ஸ் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் செய்த மழையை அதன் மேற்பரப்பை மற்றகாரணம் என கூறுகின்றனர்.