Science

வேற்று கிரக தேடல்! முடிவில்லா பயணம் ….!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆலென் டெலஸ்கோப், சுமார் 2 ஆண்டுகளுக்கு முழுக்கவே வேற்றுகிரக உயிர்களைத் தேடப் போகிறது. 42 டெலஸ்கோப்களைக் கொண்ட இந்த மையம், விண்வெளியில் இருக்கும் சுமார் 20 ஆயிரம் சிவப்பு குறு நட்சத்திரங்களை ஆராயப் போகிறது. அங்கிருக்கும் மனிதர்கள் போன்ற உயிரிகள் ஏதாவது ரேடியோ சிக்னல்களை அனுப்புகின்றனவா என்பதே இந்தத் தேடல். நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களுக்கு பல கோடி ஆண்டுகள் முன்பாகவே இவை உருவாயின என்பதால் உயிர்கள் தோன்றி வளர்வதற்கு போதுமான நேரம் இருந்திருக்கும் என்பதாலேயே இந்த ஆராய்ச்சி.