Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத ஒரு கிரகத்தின் அருகில் சந்திரன் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பை நாசா விஞ்ஞானி மார்டோ அறிவித்துள்ளார். இந்த சந்திரன் ஏரத்தாழ 400 கி.மீ பரப்பளவில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள நெப்டியூன் கோளுக்கு அருகேயுள்ள குயிர்பெர் மண்டலத்தில் பெயரிடப்படாத கிரகம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகளால் 2007 ஒ.ஆர்.10(2007 O.R.10) என்று அழைக்கப்படும் இந்த கிரகம் சூரிய குடும்பத்தின் 3-வது சிறிய கிரகமாகும்.

இந்த சின்ன கிரகத்தில் சந்திரன் மூண்டிருப்பதை நாசாவின் ஹப்பில் தொலைநோக்கி மூலம் இந்த நிலாவை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ஹப்பில் தொலைநோக்கியின் மூலம் தான், சிறிய கிரகமான ப்ளூட்டோவின் 5-வது சந்திரனை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-ம் ஆண்டில் ஹப்பில் தொலைநோக்கி உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இந்த சந்திரனை முதன்முறையாக அடையாளம் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். பின்பு 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தின் மூலம் இந்த சந்திரனானது சிறிய கிரகத்தை சுற்றி வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version