Science

சொரசொரப்பான பனிமலை வழுக்குவது எப்படி?

சொரசொரப்பான பொருட்கள் வழுக்காது என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் சொரசொரப்பாக இருக்கும் பனிமலை மட்டும் வழுக்குவது ஏன்?

சொரசொரப்பான பனிமலை வழுக்குவது ஏன்?

பனிச்சறுக்கு மலை வழுவழுப்பாக இருப்பதில்லை. ஆனால் அப்படி இருந்து பனிமலையில் சறுக்கி விளையாடும் போது, அது வழுக்குமே! அதற்கு பனிக்கட்டிகளின் மீது அழுத்தம் அதிகரிப்பது தான் காரணமாகும்.

எப்படியெனில், பனிக்கட்டிகளில் நாம் ஏறி நடக்கும் போதும், பனிச்சறுக்குப் பலகைகளை வைத்து சறுக்கி விளையாடும் போதும் பனிக்கட்டியின் மீது தரப்படும் நம்முடைய அழுத்தம் அதிகரித்து, அது உறைபனிப் படிவின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது.

எனவே, பனிக்கட்டிகள் விரைவாக உருகுகின்றது. அப்போது நாம் பனிச்சறுக்கு மலையில் விளையாடும் போது, பனிக்கட்டிகளுக்கும், பனிச்சறுக்குப் பலகைகளுக்கும் இடையே நீர் அடுக்கு உருவாகி உராய்வு குறைந்து விடுகிறது. இதனால் பனிக்கட்டி மீது நம்மால் விரைவாக வழுக்க முடிகிறது.

சொரசொரப்பான பனிக்கட்டிகள் வழுக்குவதற்கு நாம் கொடுக்கும் அழுத்தம் மட்டுமே காரணமாகும்.