Sports

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார் – யாருக்கு பரிசு கிடைக்கும்?

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும். அந்த விருதை பெறுவதற்கு 1991-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

5 அல்லது அதற்கு குறைவான டெஸ்டுகளிலும், ஐ.பி.எல். தொடங்கியதில் இருந்து இதுவரை 25 அல்லது அதற்கு குறைவான ஆட்டங்களிலும் விளையாடி இருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த விருதை பெற்றிருக்கக்கூடாது. வெற்றியாளரை பொதுமக்களும், டெலிவிஷன் வர்ணனையாளர்களும் தேர்வு செய்வார்கள். மக்கள், தங்களது வாக்குகளை ஐ.பி.எல்.-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதே போல் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியப்புக்குரிய ஷாட் அடிக்கும் வீரர், தொடரில் அதிக சிக்சர் அடிக்கும் வீரர், மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசும் வீரர், மதிப்பு மிக்க வீரராக அடையாளம் காணப்படும் வீரர், தொடரில் அற்புதமாக கேட்ச் செய்பவர், தொடரின் நளினமான (ஸ்டைலிஷ்) ஆட்டக்காரர், ஒட்டுமொத்தத்தில் அதிக ரன்கள் குவித்தவர் (ஆரஞ்சு நிற தொப்பி), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் (ஊதா நிற தொப்பி) ஆகியோருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.