Home » மோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி
Sports

மோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி

மோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி

கொல்கத்தா:

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியை 49 ரன்னில் சுருட்டி கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.

ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.3 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. சுனில்நரின் அதிகபட்சமாக 17 பந்தில் 34 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். யசுவேந்திர சகால் 3 விக்கெட்டும் பவான் நெகி, டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பெங்களூர் அணி, கொல்கத்தா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் 9.4 ஓவர்களில் 49 ரன்னில் சுருண்டது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 82 ரன்னில அபார வெற்றி பெற்றது.

49 ரன்னில் சுருண்டதன் மூலம் பெங்களூர் அணி ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்தபட்ச ரன்னை எடுத்து மோசமான நிலையை எட்டியது. எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கத்தை எடுக்கவில்லை. கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 9 ரன் எடுத்தார். நாதன் கோல்ட்டர், கிறிஸ் வோக்ஸ், கிரண்ட்ஹோம் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

கொல்கத்தா அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் காம்பீர் கூறியதாவது:-

நாங்கள் 170 ரன் எடுத்து இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை ஆனால் எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. சிறப்பான வேகப்பந்து கண்டு மெய்சிலிர்த்து விட்டேன். எங்கள் அணியில் உள்ள 3 வேகப்பந்து வீரர்கள் 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசக்கூடியவர்கள். மற்ற அணிகளில் எங்களைப் போன்ற வேகப்பந்து வீச்சு இல்லை. கோல்ட்டர், உமேஷ் தொடக்கத்திலேயே அபாரமாக வீசி நெருக்கடியை கொடுத்து விட்டனர். இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

எங்களது மோசமான பேட்டிங் இதுவாகும். இது உண்மையிலேயே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. 132 ரன் என்பது எடுக்கக்கூடிய இலக்குதான். எங்களது ஒட்டுமொத்த பேட்டிங்கும் மோசமாக அமைந்து விட்டது. எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தும் பேட்டிங் சரியாக அமையவில்லை. இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா அணி 8-வது ஆட்டத்தில் புனேயே 26-ந்தேதியும், பெங்களூர் அணி 8-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத்தை நாளையும் சந்திக்கின்றன.

About the author

Julier

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.