Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்…

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும்

தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள்
பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக
இருந்தார். ஒரு நாள், அவர் தம்
பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய
நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில்,
ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார்.
அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச்
சொல்லிவிட்டு இறந்து போனார்.
பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய
இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள்.
அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த
புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட
ஆரம்பித்தார்கள்.
முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும்
ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல்
எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை,
அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக
“ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற
சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து,
மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத்
தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப்
புதையல் கிடைக்கவில்லை.
எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட
வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின்
நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள்.
ஏமாற்றம்தான் மிஞ்சியது.
‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட
முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும்
இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும்
ஏமாற்றமே!
அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி..
தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி,
அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர்
பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண்
போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில்
அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில்
அவர்களுக்குக் கொள்ளை லாபம்.
இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான்
அப்பா புதையல் என்று குறிப்பிட்டார்
என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள

Exit mobile version